Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2021 12:34:55 Hours

நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் யாழ்பாணத்தில் தேவையுடைய மற்றுமொரு குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு

தனது பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் யாழ்ப்பாண சங்கரத்தை திருமதி ஆர். அமுதாபிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா 513 வது பிரிகேட்டின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. விழாவில் பிரதம அதிதியாக யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கலந்துக் கொண்டார்.

யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் வேண்டுகோளின் பேரில் புகழ்பெற்ற நன்கொடையாளர் திரு. குமார வீரசூரிய அவர்கள் வழங்கிய கட்டுமானப் பணிகளுக்கான மூலப்பொருட்களிக்கான நிதி உதவியுடன் 513வது பிரிகேட் தளபதியின் படையணியின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கும். அடிக்கல் நாட்டிய பின்னர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பயனாளியின் பிள்ளைகளுக்கு வழங்கினார்.

இதன் போது 51 வது படைப்பிரிவின் தளபதி , 511, 513 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முப்படை மற்றும் பொலிஸ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக படையினரும் கலந்து கொண்டனர். spy offers | Buy online Sneaker for Men