21st March 2021 18:52:11 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சமூகமயமாக்கலின் உற்சாகத்தை அளித்து, இனிமையான கடந்த காலத்தை நினைவுபடுத்துவதற்கான சந்தர்பத்தை உருவாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகம் வெள்ளிக்கிழமை (19) தல்செவன ஹேட்டலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முப்படை முன்னாள் வீரர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து இசையால் மகிழ்வித்தது.
1970-1990 காலப்பகுதியில் அழைக்கப்பட்ட முன்னாள் முப்படை சேவை வீரர்களின் கடந்தகால பங்களிப்பைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. தொடர்ந்தும் விழாவில் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி பதவிக்காலத்தில் வீரர்களின் உறுதியான சேவை மற்றும் இந்த நிகழ்விற்கு அவர்களின் வருகையைப் பாராட்டினார். மேலும் தேசிய அங்கீகாரத்திற்காக அவர்களின் பிள்ளைகளை முப்படை சேவையில் இணைந்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகம் இராணுவ தலைமையத்தின் ஆலோசணைகளுக்கு அமைவாக யாழ் முன்னாள் படைவீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், நலன்புரி வசதிகளையும் வழங்கும் என உறுதியளித்தார். இந்த மறக்க முடியாத சந்திப்பைக் குறிக்கும் வகையில் பரிசுகளையும் வழங்கினார், மேலும் அவர்களின் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
51 வது படைப்பிரிவு தளபதி , 511, 513 மற்றும் 515 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்விற்கு தங்களின் பங்களிப்பினை வழங்கியிருந்தனர். short url link | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth