Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2021 20:03:21 Hours

இலங்கை இராணுவத் தளபதிக்கு பாக்கிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி வரவேற்பளிப்பு

பாக்கிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் கமார் ஜாவிட் பஜ்வா, தற்போது பாக்கிஸ்தானில் உள்ள இலங்கையின் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு ராவல்பிண்டியில் உள்ள ஜெனரல் தலைமையகத்தில் (GHQ) வெள்ளிக்கிழமை (19) அன்பான வரவேற்பு அளித்தார்.

அங்கு வருகை தந்த ஜெனரல் சவேந்திர சில்வா, உயிர் நீத்த போர்வீரர்களுக்கு முதலில் யாத்கர்-இ-ஷுஹாதா நினைவுச்சின்னத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அதனையடுத்து இருவருக்கும் இடையிலான சினேபூர்வமான சந்திப்பின் போது பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, பிராந்தியத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக பாகிஸ்தான் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் , இலங்கையின் உண்மையான நண்பனாக இருத்தல், நாடு சவால்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களின் போது வழங்கிய ஒத்துழைப்புகள் என்பன பற்றியும் நினைவுகூர்ந்தார். அத்தோடு இலங்கை ஆயுதப்படைகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் இராணுவம் வழங்கிய ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

கௌரவ விருந்தினராக செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) தேசிய தின கூட்டு சேவைகள் அணிவகுப்பு என்றும் அழைக்கப்படும் பாகிஸ்தான் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாகிஸ்தான் இராணுவத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

பாக்கிஸ்தானில் உள்ள மதிப்புமிக்க தேசிய தின கூட்டுச் சேவை அணிவகுப்பு (மார்ச் 23) பாகிஸ்தானின் அபிலாஷைகளையும் சாதனைகளையும் எடுத்துக்காட்டுகிறது, மேலும் பாகிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் தேசிய மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

வருகை தந்த ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அழைப்பிற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வு பிணைப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று உறுதியளித்தார்.

"இலங்கையின் ஆயுதப்படைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் 1980 களில் இருந்து பாக்கிஸ்தானின் ஆயுதப்படைகள் செய்துள்ள ஒவ்வொரு உதவிகளையும் மற்றும் பாக்கிஸ்தானின் ஆயுதப்படைகள் செய்துள்ள பங்களிப்பினை இலங்கையர்கள் நன்கு நினைவில் கொள்கிறார்கள். . இந்த இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு படைகளும் தங்களது தொழில் எல்லைகளை விரிவுபடுத்த உதவியுள்ளது, தற்போது இலங்கையில் நடந்து வரும் இலங்கையில் நடந்து வரும் ‘Shake Hands’, என்ற இராணுவப் பயிற்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. அந்த ஆதரவு இலங்கையின் உண்மையான நண்பராக கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திலும் உண்டு. "என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரல் கமா ஜாவிட் பஜ்வாவிடம் தெரிவித்ததுடன் அவருக்கு நினைவு பரிசும் வழங்கினார் . Sports News | Air Jordan Release Dates Calendar