Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2021 19:00:01 Hours

புதிய சிறிய ரக ஆயுத ஆய்வகம் திறந்துவைப்பு

புத்தளத்திலுள்ள இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தின் பயிற்சி நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, புதிய சிறிய ரக ஆய்வுக்கூடம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தின் தளபதி லெப்டினன் கேணல் கேஎம்டிஐபி கமல்கொட அவர்களால் திங்கட்கிழமை (08) திறந்துவைக்கப்பட்டது.

இராணுவ தலைமையகத்தின் பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனர் பிரியங்க பெர்னாண்டோ அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர் புத்தளத்தில் சேவையாற்றும் போது அவர்களின் வழிகாட்டுதலில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஓரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பிலான அமர்வில் மூன்று பேரை பயிற்றுவிக்கூடிய இந்த ஆய்வகம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்பதுடன், ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு ஆயுதத்தின் பயன்பாடு, அதன் தயாரித்தல், தொழில்நுட்ப அம்சங்கள், இலக்கு எடுப்பது போன்றவற்றைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற உதவும்.

தற்போது, புத்தளத்திலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் சுமார் 700 பேர் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். Sneakers Store | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov