17th March 2021 22:15:32 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள பூநேரினில் அமைந்துள்ள 66 ஆவது படைப்பிரிவிற்கு முதல் முறையாக விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனர் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கு திங்கட்கிழமை (15) அப்படைத் தலைமையக நுழைவாயிலில் வைத்து வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 66 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசானநாயக்க அவர்களால் அன்பான வரவேற்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து வருகை தந்த கிளிநொச்சி தளபதியிக்கு 66 ஆவது படைப்பிரிவின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கமளிப்பு விளக்கக்காட்சி முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 66 வது படைப்பிரிவின் தளபதி, படையினர்கள் மற்றும் தளபதியுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றிய அவர் இராணுவ கடமைகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு சவால்களுக்கான தயார்நிலையையும் எடுத்துரைத்தார்.
பின்னர், ஆணையிறவு காமினி குலரத்ன நினைவுச் தூபியை பார்வையிட்ட அவர் நினைவக வளாகத்தில் ஒரு மரக்கன்றொன்றையும் நட்டுவைத்தோடு தனது எண்ணங்களை அதிதிகள் புத்தகத்தில் பதிவிட்டார்.
இவ் விஜத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். spy offers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify