17th March 2021 19:30:53 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 22 வது படைப்பிரிவின் 222 வது பிரிகேடின் கீழ் சேவையாற்றும் 22 வது விஜயபாகு காலாட்படை பிரிவின் படையினரால் அப்பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களின் தேவையை கருத்தில் கொண்டு சேருநுவர பகுதியில் வசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த 13 வறிய குடும்பங்ளை சேர்ந்த கர்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய ஊட்டச் சத்துணவுகள் அடங்கிய பொதிகள் சனிக்கிழமை (13) வழங்கப்பட்டன.
தொம்பே, கணேகொட ஸ்ரீ புண்யாவர்தனராம விகாரை மற்றும் கம்பஹா ஸ்ரீ சாரணந்த மடாலய தலைவர் வண. திக்பிட்டியே சோமானந்த தேரரால் மேற்படி சத்துணவு பொதிகள் வழங்கி வழங்கப்பட்டன.
மகானாம மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் (95 மாணவ குழு ) மாணவர்களின் உதவியுடன் தேரரால் மேற்படி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் 222 வது பிரிகேட் மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையினர் இணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
222 வது பிரிகேடின் தளபதி கேணல் விராஜ் விமலசேன, 22வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சுரங்க ராமநாயக்க, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். url clone | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta