18th March 2021 16:00:01 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே மார்ச் 16 – 17 ஆம் திகதிகளில், தனது கட்டுப்பாட்டு அலகின் கீழுள்ள 11 வது படைப்பிரிவுக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
11 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்த அவர் 111வது பிரிகேட் தலைமையகம் , 2 வது (தொண்) இலங்கை சிங்கப் படையிணிக்கும் , பல்லேகலவில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலை, இலங்கை ரைபில் படையணி முகாம் , லக்ஸபான மின் உற்பத்தி நிலையம், மற்றும் 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் அவருக்கு காவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.
அத்தோடு குறித்த இடங்களில் படையினருடன் தனது எண்ணங்ளை பகிர்ந்துக்கொண்ட தளபதி, தனது வருகையின் நினைவுகளை விருந்தினர் பதிவேட்டில் பதிவிட்டார்.
அதனையடுத்து தலதா மாளிகைக்கு சென்றதுடன் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார், தியவடன நிலேமே மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ஆகியோருடனும் கலந்துரையாடினார்.
11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷாரத சமரகோன் அவர்களுடன் 111 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, 112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க, கட்டளை அதிகாரிகள் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். best Running shoes brand | Nike Shoes