Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2021 17:00:01 Hours

புனானி பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் 476 சிப்பாய்கள் பயிற்சிகள் நிறைவின் வெளியேறல்

புனானியில் அமைந்துள்ள பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் மூன்று மாத கால அடிப்படை ஆட்சேர்ப்புப் பயிற்சி பாடநெறி எண் 01-ல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 476 பேரின் வெளியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, பட்டாலியன் பயிற்சி பாடசாலை தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அவருக்கு மரியாதையளிக்கப்பட்டது.

சாதாரண படைவீரர் பி.டபிள்யு.பி.டி வீரசிங்க அவர்கள் சிறந்த உடல் வலிமைக்கான கோப்பையை சுவீகரித்துக்கொண்டதுடன் , சிறந்த சூட்டுக்கான விருதை சாதாரண படைவீர்ர் ஏ.ஏ.டி.டி ஆதிகாரியும் பெற்றுக’கொண்டார்.

பயிற்சி காலத்தில் அனைத்து தத்துவார்த்த மற்றும் நடைமுறை பிரிவுகளுக்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற சாதாரண படைவீரர் சம்பத் அவர்களுக்கு சிறந்த தேர்வாளராக பிரதம அதிதியவர்களுக்கு கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping