Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2021 16:35:40 Hours

படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலாச் சபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அருகம்பே புளூ வேவ் ஹோட்டலில் திங்கட்கிழமை (8) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் திரு. ஏ.எல்.ஏ லத்தீப், 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ்,தென்கிழக்கு கடற்படை கட்டளை பிரதி தளபதி கொமாண்டோ நெவில் ஒபேசிரி,23 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ. முனசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரசு மற்றும் அசர சார்பற்ற நிறுவனங்களின் சிறப்பு அதிகாரிகள், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதோடு, ஏறக்குறைய ரூ 2.2 மில்லியன் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு பொத்துவில் மற்றும் லாஹூகல பிரதேச பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வீடுகள் அற்ற, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .800,000 மதிப்புள்ள வீட்டு வசதிகள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டன.

ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சுயதொழில் செய்வதற்காக 250,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றும் அதே விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், அதே நிகழ்வில் 10 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவு பொதிகள், குழந்தைகளுக்கான பொருட்கள் அவசியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் உணவுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

அதேபோல் பொத்துவில் தள வைத்தியசாலையின் பணியாளர்கள், பாதுகாப்பு படை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், முன் பள்ளி ஆசிரியர்கள், சமுர்த்தி அதிகாரிகள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. Running sports | Nike Air Max 270