Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2021 16:38:10 Hours

64 வது படைப்பிரிவின் படையினர் முன்னாள் போராளிகளுடன் இணைந்து தேனி வளர்ப்பு பட்டறையில் பங்கேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேட் படையினர் முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அப்ப்படைப்பிரிவு தலைமையகத்தில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற தேனீ வளர்ப்பு முறைமை தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி பட்றையில் மாத்தளையிலுள்ள ‘பிங்கு சம்பத்’ பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் திரு திஸ்ஸ பண்டார, அதன் தேசிய அமைப்பாளர் திரு துஷார விஜேசிங்கவுடன் இணைந்து பட்டறையில் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இராணுவம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் ஆர்வத்துடன் இந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.

64 வது படைப்பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன, , 64 வது பிரிகேட் தளபதி கே.டி.பி.டி சில்வா, மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமவாசிகளிடமிருந்து பரந்த அளவில் சமூக பங்களிப்பை அடையும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. Best Nike Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases