20th March 2021 15:56:44 Hours
இலங்கை இராணுவம் தனது பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் 'உள்ளக பாதுகாப்பு மற்றும் போர் தந்திரோபாயங்கள் குறித்த புதுமையான அதிநவீன முறைமைகளுக்கமைவான இருதரப்பு பயிற்சியைத் புதன்கிழமை (17) காலை ஆரம்பித்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இரைணந்து மேற்கொள்ப்படும் இந்த கள பயிற்சிகள் சாலியாபுரவிலுள்ள கஜபா படையணி தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைவாக ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வின் ஆரம்பகட்டமாக இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் கஜபா படையணி தலைமையக மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற முறையானதும் வண்ணமயமானதுமாக இடம்பெற்ற அணிவகுப்பு மற்றும் களப் பயிற்சிகளின் ஆரம்ப விழாவில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரிகள் தங்களது தேசிய கொடிகளை ஏந்திக்கொண்டனர்.
அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதத்தை இசைத்தல் விளக்கமளிப்பதற்கான வீடியோ காட்சிகளை ஒளிபரப்புதல், அதிகாரிகளை அறிமுகப்படுத்தல், குழு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.
'ஷேக் ஹேண்ட்ஸ்' தந்திரோபாய அடிப்படையிலான இராணுவ பயிற்சிகள், உள்ளக பாதுகாப்பு மற்றும் போர் தந்திரோபாயங்கள், பயங்கரவாதம் / தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கைகள், உயிர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி மிகவும் யதார்த்தமான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ள நிலைமையை வெளிப்படுத்தியதாக காணப்படும். அத்தோடு பயங்கரவாத மறைவிடங்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிபொருட்களை அடையாளம் காணுதல், பயங்கரவாத சூழலில் உளவுத்துறை சேகரிப்பு, கிளர்ச்சியாளர்கள் மீதான உளவு, தாக்குதல்களை நிறைவேற்றுவது போன்ற களப் பயிற்சிகள் கஜபா படையணியினருடன் மார்ச் 31 வரை இடம்பெறவுள்ளன.
கஜபா படையணி நிலையத்துடன் இணைந்து காலாட் படை பணிப்பகத்தின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு அதிகாரிகள் மற்றும் 35 சிப்பாய்களும் , இலங்கை இராணுவத்தின் 4 அதிகாரிகள் மற்றும் 40 சிப்பாய்களும் இந்த கள பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். பயிற்சி பணிப்பாளரின் கட்டளையின் கீழ், பயிற்சி பிரதி பணிப்பாளர் , இரண்டு கட்டுப்பாட்டாளர்கள், இரண்டு கண்காணிப்பாளர்கள், இரண்டு மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஒரு வழங்கல் அதிகாரி ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.
பயிற்சிகள் வியாழக்கிழமை (18) முறையாக ஆரம்பிக்கப்பட முன்னர் பாகிஸ்தான் இராணுவக் குழுவினரால் , நிறுவன அமைப்பு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு தந்திரங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களில் பாகிஸ்தான் இராணுவத்தின் அனுபவம், பேரழிவு தொடர்பான நடவடிக்கைகள், பயங்கரவாத மறைவிடங்கள் மீதான சோதனைகள், உளவுத்துறை சேகரிப்பு செயல்முறை, உடற்பயிற்சி என்பவை தொடர்பான விளக்கவுரை வழங்கப்படும்.
மேலான பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் சஞ்சீவ பெர்னாண்டோ செயல்படுகிறார், பிரதி பயிற்சி பணிப்பாளர் கேணல் டபிள்யூ.எஸ்.எல்.ஹேமரத்ன அடுத்த கள பயிற்சி‘ஷேக் ஹேண்ட்ஸ்’ பயிற்சி பணிப்பாளராக செயற்படுகிறார்.
அதேபோல் கஜபா படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல கலந்துகொண்டார். இலங்கையில் அவர்கள் தங்கியிருக்கும்போது, பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மின்னேரியா காலாட்படை பயிற்சி மையம் மற்றும் ஏனைய சில சுற்றுலா தளங்களையும் பார்வையிடவுள்ளதுடன், சகல விதமான சுகாதார நடைமுறைகளும் அவர்களினால் பின்பற்றப்பட்டுள்ளது. Buy Sneakers | Air Jordan