Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2021 16:49:54 Hours

இராணுவ இயந்திரம் மற்றும் படையினரின் ஒத்துழைப்புடன் மல்லாகத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் நிர்மாணம்

இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் மீதான நாட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணம் - மல்லாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ பாஸ்கரன் கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு அவசியமான உதவிகள் யாழ் பாதுகாப்பு படையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (14) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலாளர் திரு கணபதிபிள்ளை மஹேசன் பிரதம விருந்தினராக் அழைக்கப்பட்டிருந்ததுடன், 51 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால், யாழ். மாவட்ட மேயர் திரு விஸ்வலிங்கம் மணிவன்னன், பிரதேச செயலாளர் திரு. எஸ் சிவ ஸ்ரீ, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதி தலைவர் திரு ரவின் விக்கிரமரத்ன, தேசிய கிரிக்கட் மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு கமல் தர்மசிறி, 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பகட்டமாக பிரதம விருந்தினர் மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் கிரிகெட் மைதானத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

அதனையடுத்து விழாவின் ஆரம்பமாக தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் கொடி மற்றும் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன், இக்கொடிகள் இலங்கை கிரிக்கெட்ட பிரதித் தலைவர், பிரதம விருந்தினர் யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்ளிட்டோரால் ஏற்றிவைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு.செருனாஸ் நிஷாந்தன் தனது உரையில், மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கனவை நனவாக்க உதவிய யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். latest Running | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4