Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2021 18:45:43 Hours

கிழக்கு பகுதியை மையப்படுத்திய அதிகாரிகளுக்கு ‘கேப்ஸ்டோன் கோட்பாடு’ பற்றிய விரிவுரை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சி கட்டளையின் தொகுப்பின் மூலமான ‘கேப்ஸ்டோன் கோட்பாடு’ தொடர்பிலான விரிவுரையொன்று வெலிகந்தவிலுள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சனிக்கிழமை (13) நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் ஒருங்கிணைப்பில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் கேணல் மூலோபாய மற்றும் கோட்பாடு லெப்டினன் கேணல் லசித் தப்ரூவ் இந்த விரிவுரையை நடத்தினார். Sports brands | Sneakers