Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2021 18:00:43 Hours

சிவில் விவகாரம் தொடர்பானவர்களுக்கு பயிற்சி பட்டறை

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் தயாரிக்கப்பட்ட 2020 – 2025 வரையான முன்னோக்குத் மூலோபாய திட்டதிற்கிணங்க உளவியல் பணிப்பகத்தினால் சிவில் விவகார அதிகாரிகளுக்குகான 3 நாள் பயிற்சி பட்டறையொன்று இலங்கை கவசப் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை மார்ச் மாதம் 2,3 மற்றும் 4 ம் திகளில் நடைபெற்றதுடன், தற்கால சிவில் விவகாரங்கள், சிவில் விவகார அதிகாரிகளின் பொறுப்புகள், சிவில் விவகார அதிகாரிகளின் நெறிமுறைகள்', (விருந்தோம்பல் - சிவில் மற்றும் இராணுவம்) இந்து கலாசாரம் , போர் வரலாறு மற்றும் இஸ்லாமிய கலாசாரம் போன்றவை தொடர்பிலான விரிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையங்கள் மற்றும் அதன் கட்டளை அமைப்புக்களின் தெரிவு செய்யப்பட்ட 33 சிவில் விவகார அதிகாரிகள் இந்த 3 நாள் பயிற்சி பட்டறையில் கலந்துக்கொண்டனர்.

64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன, உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன, கேணல் கேடிஆர்பி கொடிபிலி, கேணல் பிஎம்ஆர்ஜே.பண்டார ,லெப்டினன்ட் கேணல் கேஜே ரணவீர, லெப்டினன் கேணல் ஐ.யூ.கே வத்தேகெதர, லெப்டினன் கேணல் (ஓய்வு) ஜேபி.வேரகம, லெப்டினன் கேணல் பிஜிஎஸ் சமந்தி, மேஜர் ஈஏஎஸ் சமிந்த ஆகியோருடன் இலங்கை நிர்வாகத் துறையின் அதிகாரிகள் திரு, ஆஷெக் அமிஹர் ஹக்கீம்தீன் மற்றும் திருமதி. சதுராதி விஜேசிங்க, ஆகியோரும் வளவாளர்களாக பங்கேற்றனர். short url link | Air Jordan Release Dates 2021 Updated , Gov