14th March 2021 12:58:43 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை மேற்படுத்துவதற்கான முன் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட காய்கறிகளையும் பழங்களையும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் - மற்றும் பிற இடங்களில் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவ தலைமையகத்தில் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் உதவியுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து படையினரின் குடும்பத்தாருக்காக மரக்கறி வகைகள் கொள்வனவு செய்யப்பட்டன.
யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன், இராணுவ படையினருக்கு மானிய விலையில் வெள்ளிக்கிழமை (12) விநியோகிக்கப்பட்டன, யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இத்திட்டம் யாழ்.தீபகற்பத்தில் இராணுவ வீரர்கள் மற்றும் விவசாய சமூகங்களுக்கு நீண்டகாலத்திற்கு கைக்கொடுக்ககூடியதாக அமைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் மேலதிகமாக முன்னெடுக்கப்பட்டவுள்ள நலன்புரி விடயங்கள் தொடர்பில் படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர் மரக்கறி வகைகள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இத்திட்டமானது யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் 5 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் கட்டளை அதிகார மற்றும் வழங்கல் போக்குவரத்து பிரிவினரால் மேற்படி பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டதுடன், எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பிலான முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. Nike footwear | Nike Air Max 270