Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2021 15:58:43 Hours

எயார் மொபைல் பயிற்சி கல்லூரியிலிருந்து இருந்து 188 இராணுவ வீரர்கள் பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்டு வெளியேறினர்

எயார் மொபைல் பயிற்சி கல்லூரியில் விமான தாக்குதல் தொடர்பிலான பாடநெறி 22 இன் பயிற்சியினை நிறைவு செய்துக்கொண்ட 8 அதிகாரிகளும் 180 சிப்பாய்களும் வியாழக்கிழமை (11) நிகாவெவவிலுள்ள உள்ள எயார் மொபைல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பிரியாவிடை நிகழ்வுடன் வெளியேறினர்.

53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் லெப்டினன் டிஎம்ஏஎஸ்பி தெல்வதன சிறந்த மாணவருக்கான விருதையும், சிறந்த தீயணைப்பு வீரருக்கான விருதையும் பெற்றுக் கொண்டதுடன் சாதாரண சிப்பாய் கேஏஎச் டி மெல் பிரதம விருந்தினரிடமிருந்து சிறந்த உடற் தகைமை கொண்ட வீரருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

532 பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Sports brands | Nike Shoes, Clothing & Accessories