Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2021 21:58:43 Hours

இந்திய உயர் ஸ்தானிகர் யாழ் தளபதியுடன் சந்திப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியிடம் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பாலாலி இந்திய போர்வீரர்களின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அவரது பாதுகாவலர்களுடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்தபோது யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்த போது தளபதியால் அவருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நற்புறவு சந்திப்பின் போது சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் நல்லிணக்க செயல்முறை மற்றும் சமூகத்தின் நிலையான அமைதி , நல்வாழ்வின் செயல்பாட்டில் இராணுவத்தின் பங்களிப்பு விஷயங்களும் பாதுகாப்பு படை தளபதியால் விவரிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் பற்றியும் உயர்ஸதானிகர் கேட்டறிந்தார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டதுடன் நிலவும் சிவில்-இராணுவ உறவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அத்தோடு இவ்வாறான விடயங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதியை சந்திப்பதற்கு முன்னதாக 1987 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படைச் செயற்பாடுகளின் போது உயிரை தியாகம் செய்த இந்திய இராணுவத்தின் 10 வது விமானப்படை கொமாண்டோ படையணியின் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இந்திய அமைத்திகாக்கும் படை நினைவு தூபியில் உயர் ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள், சிரேஸ்ட் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாகளினாலும் நினைவுக்கூறப்பட்டது. Running sneakers | New Balance 991 Footwear