12th March 2021 17:30:13 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 2021 மார்ச் 11 ஆம் திகதி வவுனியா நகரிலுள்ள பொது இடங்களில் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தொற்று நீக்கம் செய்யும் பணிகள் 562 பிரிகேட் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 562 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ச அவர்களின் மேற்பார்வையின் கீழ் பஸ் தரிப்பிடங்கள், நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
அதற்கமைய வவுனியா பொது சுகாதார அதிகாரி, நகர சபைகளின் உதவியுடன் 17 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையினரால் இந்த கிருமிநாசினி திக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டனர்.
மேலும், 562 ஆவது படைப் பிரிவின் 17 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்க படையணியின் படையினரால் 2021 மார்ச் 10 ஆம் திகதி வன்னாங்குளம் தங்க கோவில் ஆரோக்கியமான சூழலுக்காக சிரமதானம் மற்றும் துப்புரவு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இப் பணிகளானது வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 23 வது ஆண்டு நிறைவு மற்றும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. latest Running | 『アディダス』に分類された記事一覧