Header

Sri Lanka Army

Defender of the Nation

12th March 2021 17:15:13 Hours

பாடநெறியை நிறைவு செய்த கனிஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா

புத்தலவிலுள்ள அதிகாரிகளுக்கான தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தில் கனிஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி - 20 இனை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா 2021 மார்ச் 09 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதிகாரிகளுக்கான தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட சிறப்பு கலந்து கொண்டதுடன், பிரதி தளபதி, பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இந்த பாடநெறி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு மாத கால பாடநெறியைத் தொடர்ந்த 76 அதிகாரிகளில் இலங்கை இலேசாயுத காலாட் படையின் மேஜர் டபிள்யூ. ஏ.சி.என் கருணாதிலக முதலிடத்தை பெற்றுக் ணெடார்.

இவர்களுக்கான சான்றிதழ்கள் தளபதி மற்றும் பிரதி தளபதியால் வழங்கி வைக்கப்பட்ட பின்னர், பயிலுநர் அதிகாரிகளின் அர்ப்பணிப்புகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கான சிறிய வானொலிப் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தளபதிக்கான பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் தளபதியின் உரையினை தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்வுகளின் பின்னர் பட்டமளிப்பு விழா நிறைவடைந்து.

இவ்விழாவில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டு தளபதியிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டவர்கள் விபரம் கீழ்வருமாறு.

மேஜர் டபிள்யூ ஏ சி என் கருணாதிலகே - எஸ்.எல்.எல்.ஐ

மேஜர் ஏ டி எச் டி டி பந்துசேன ஆர்.டபிள்யூ.பி - எஸ்.எஃப்

மேஜர் எஸ் ஏ பி ஆர் குணசேகர - எஸ்.எல்.ஏ

மேஜர் கே எச் எல் வி கருணாரத்ன - எஸ்.எல்.இ

மேஜர் டப்ள்யூ எம் என் என் விஜேரத்ன - ஜி.ஆர் best shoes | Women's Nike Superrep