12th March 2021 17:06:13 Hours
பீரங்கி பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ஷமில முனசிங்கவின் முயற்சியினால் 5 வது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினருக்கான போஸ்ட் டிப்போ பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை பீரங்கி படையணியின் நோக்கத்திற்கு அமைவான இப்பாட நெறிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான 3x122 மிமீ பீரங்கிகள் வழங்கப்பட்ட பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி சேனாபுராவில் உள்ள 5 வது பீரங்கிப் படைப்பிரிவில் பாடநெறி தொடங்கப்பட்டது.
ஆரம்ப விழாவில் பீரங்கிப் படை கல்லூரியின் தளபதி கேணல் ரொஹான் மடகொட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழத்தினார்.
5 வது பீரங்கிப் படையின் பாரம்பரிய அம்சங்களை பின்பற்றி பயிற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கன சாத்தியங்களாவும் இந்த பயிற்சிகள் அமைந்தன. Running sports | Nike Off-White