12th March 2021 16:52:13 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 4 வது விஷேட படையினர் கந்தளாய் - எல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுடைய வியாழக்கிழமை (12) மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளனர்.
படையினரின் வருகையை கண்டவுடன் சந்தேக நபர்கள் குறித்த இடத்திலிருந்து மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். அங்கிருந்து மீட்கப்பட்ட மணல் அகழ்வு உபகரணங்களும் வாகனங்களும் சேறுநுரவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகவ பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின்படி சட்டவிரோத, சமூக விரோத செயற்பாடுளை தடுக்கும் செயற்பாடுகளின் போது பொலிஸாருக்கு பாதுகாப்பு படையினர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகவும். Adidas shoes | Yeezy Boost 350 Trainers