13th March 2021 16:13:43 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகதின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் பூனானியிலுள்ள 23 வது படைப்பிரிவின் அதிகாரவாணையற்ற சிரேஷ்ட அதிகாரிகள் 25 பேர் அடங்கிய குழுவிற்கு சனிக்கிழமை (13) தலைமையகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 26 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்றில் ஏறுமாறு கட்டளையிடப்பட்டது.
குறித்த பஸ்ஸில் பயணித்த அனைவரும் 45 நிமிட பயணத்துக்குள் பாசிக்குடாவில் இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் சுற்றுலாத்துறையில் பிரபலமான லாயா வேவ்ஸ் ஹாட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயினர். காரணம் அவர்கள் முன்பாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி சன்ன வீரசூரியவுடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்பளிக்க காத்திருந்தார்.
இதன்போது நம்ப முடியாத வகையில் சுமூகமாக அவர்களை அணுகிய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சகலருடன் கைக்குழுக்கி கலந்துரையாடியாடினார், பின்னர் அவர்களுடைய பணிகளை பாராட்டிய தளபதி ஹோட்டல் புல்வெளியில் அமர்ந்து காலை உணவு நேரத்தை கழித்ததுடன் அதிகாரிகளுடன் எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய சேவைத்துரைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும் கேட்டறிந்துக்கொண்ட அவர் அனைத்து இலங்கை மக்களினதும் நலனுக்கான பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
அதனையடுத்து 25 அதிகாரவாணையற்ற அதிகாரிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் ஹோட்டல் ஊழியர்களுடனும் சுமூகமாக பேசிய தளபதிக்கு அதிதிகள் பதிவேட்டில் நினைவுகளை பதிவிடுமாறும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனையடுத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (12) கலந்துரையாடினார். Sportswear free shipping | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff