Header

Sri Lanka Army

Defender of the Nation

12th March 2021 22:05:00 Hours

கிழக்கில் தகவல்களை தளபதி கேட்டறிந்தார்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (12) கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்துக்குள் சேவையாற்றும் படைப்பிரிவின் படைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார்.

பின்னர் இராணுவ தளபதிக்கு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்ட்டதுடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய அவர்களால் வரவேற்பளிக்கப்பட்து.

அதனையடுத்து 22,23 மற்றும் 24 வது படைப்பிரிவுகளின் படைத் தளதிகள், அனைத்து பிரிகேட் தளபதிகள், 7 வது இலங்கை பீரங்கி படையினர், 7 வது இலங்கை கள பொறியாளர்கள், 7வது இராணுவ புலனாய்வுப் படையணி மற்றும் 3வது (தொண்) இராணுவ புலனாய்வுப் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சில அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் பாதுகாப்பு நிலைமைகள், சிவில் இராணுவ ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மற்றும் பிற சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் நிறைவாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிதிகள் புத்தகத்தில் இராணுவ தளபதி கையொப்பமிட்டார்.

அதனையடுத்து ஜெனரல் ஷவேந்தி சில்வா 6 வது கஜபா படையணி பட்டாலியன் மற்றும் நாவலடியிலுள்ள அதன் தலைமையகத்திற்கும் வருகை தந்ததுடன் அதிகாரிகளிடத்தில் நல்வாழ்வு மற்றும் நலன்புரி விடயங்கள், நெருக்கடிகள் என்பன குறித்தும் கேட்டறிந்துக் கொண்டார் Asics shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ