11th March 2021 12:10:04 Hours
கிழக்கு பகுதியிலுள்ள 232 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் சமீபத்தில் தெஹியதகண்டியவில் உள்ள இந்திரசர சிறுவர்கள் மேம்பாட்டு மையத்தின் சிறுவர்களுக்கு அவசியமான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அங்குள்ள 35 சிறுவர்களுக்கு அவசியமான தலையணைகள் படுக்கை விரிப்புகள், புத்தகங்கள், குறும்படங்கள், உலர் உணவு பொதிகள், பிஸ்கட் வகைகள், சொக்லட் மற்றும் சுகாதார தரத்துடன் கூடிய முகக்கவசங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான நிதி உதவி மட்டக்களப்பு கொமர்ஷல் வங்கி மற்றும் திருமதி சமந்தி பெரேரா அவர்களால் வழங்கப்பட்டது.
232 வது பிரிகேட் தளபதி கேணல் ருவான் விஜேசூரிய, 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி மேஜர் டிகேஎஸ் சேனாரத்ன, 232 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் கே.ஏ.டபிள்யூ.எஸ். கொடிதுவக்கு மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவில் ஒருங்கிணைப்பு செயலாளர் திருமதி கமனி ரத்நாயக்க ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். Sport media | Nike