11th March 2021 08:30:04 Hours
பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்னா வீரசூரிய புதன்கிழமை (10) மின்னேரிய கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
தளபதிக்கு தலைமையகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மரக்கன்று நாட்டுதல் என்பன இடம்பெற்றது. இதன்போது கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன தனது கட்டுப்பாட்டு அலகு தளபதிகளுடன் அமைப்புக்களின் பங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.
பின்னர், அவர் 3 வது பொறியாளர் சேவை படை மற்றும் 3 வது இலங்கை இராணுவ கருவிகள் படை முகாம்களைப் பார்வையிட்டார். அங்கு அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் விருந்தினர் பதிவு புத்தகத்தில் நினைவுகளை பதிவிட்டார்.
சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். trace affiliate link | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth