11th March 2021 10:00:04 Hours
திருகோணமலையில் உள்ள இராணுவ வழங்கல் கல்லூரியில் உபகரண கட்டுப்பாட்டாளர்பாடநெறி எண் - 23யை நிறைவு செய்த 31 அதிகாரவாணை அற்ற அதிகாரிகளுக்கு 2021 மார்ச் 10 ஆம் திகதி தியதலாவையிலுள் இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியில்பிரியாவிடை அணிவகுப்புடன் அவர்களுக்கானநிலை சின்னங்களும் அணிவிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழும் இராணுவ பயிற்சி கட்டளையின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், இரண்டு பிரவுகளின் கீழ் இராணுவ நிரந்தர படையின் கீழ் 23 அதிகாரிகளும் தொண்டர் படையின் கீழ் 08 அதிகாரிகளுமாக வெளியேறியுள்ளனர்.
இலங்கை இராணுவ நிரந்தர மற்றும் தொண்டர் படையின் தகுதி மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரவாணை பெறாத அதிகாரிகளை உபகரண கட்டுப்பாளர்களாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயந்திரவியல் காலாட் படையின் ப்டைத் தளபதியும் இராணுவ பயிற்சிக் கட்டளைகள் தளபதியுமான மேஜர் ஜெனரல் சேன வடுகே தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கர்ணல் ஹெச்.ஏ. கீர்த்திநாத அவர்களின் அழைப்பிற்கு இணங்க பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.
பயிற்சி பாடசாலையின் தளபதியினால் வளாகத்திற்கு வந்தபிரதம விருந்தினர் அன்புடன் வரவேற்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பாதுகாவலர் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன. அணிவகுப்பு மரியாதையினை பிரதம பயிற்சி ஆலோசகர் மேஜர் எம்.டபிள்யூ. விஸ்வமித்திர கட்டளையிட்டார்.
அணிவகுப்பில் தகுதிகாண் அதிகாரிகளாக வெளியேறிய அந்த அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தகுதிகாண் சின்னம் வழங்கரிக்கப்பட்டது. பிரதம விருந்தினர் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார்.
வெளியேறும் அனைத்து அதிகாரிகளுடனும் ஒரு குழு புகைப்படத்தை எடுத்துக்கொண்ட பின்னர் அதிகாரிகளுடன் தேனீர் விருந்திற்கு அழைக்கப்பட்டார்.
அணிவகுப்பைக் காண சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் விஷேட அழைப்பாளர்கள் வருகை தந்திருந்தனர். Sport media | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!