09th March 2021 12:00:29 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்ட நிறைவை முன்னிட்டு பயிற்சி மற்றும் வாசிப்பு புத்தகங்கள் உட்பட கற்றல் உபகரணங்கள் 30 பொதிகள் பிரசங்குளம் முன்பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு 15 ஆவது சிங்கப் படையினரால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
562 பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ச, 15 வது (தொ) இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.ஜே.பி. ராஜபக்ச, 15 வது சிங்கப் படையின் அதிகாரிகள் மற்றும்சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். bridge media | Asics Onitsuka Tiger