11th March 2021 09:58:04 Hours
யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் சமூக மேம்பாட்டுப் பிரிவான 'கரிட்டஸ் - மனிதவள மேம்பாட்டு மையமானது,யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் எலுத்தமடு பகுதியில் "வடக்கே கரிட்டாஸ் குடும்பத்தின் நட்பு பயணம்"எனும் எண்ணக்கருவின் கீழ் மர நடுகைத்திட்டத்தை முன்னெடுத்தன்னர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பேராயரும் கரிட்டஸ் சிறிலங்கா சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் தலைவருமான கலாநிதி பி. ஞானபிரகாசம் அவர்களும் , யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா , யாழ் மாவட்ட உதவி செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதுடன். கரிட்டஸ் சிறிலங்கா சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளரான எஸ். யூஜின் பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத அனுட்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்வரவேற்புரை கரிட்டஸ் சிறிலங்கா சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளரானஎஸ். யூஜின் பிரான்சிஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
பின்னர் நிகழ்வில் சிறப்பம்சமாக யாழ்ப்பாண பேராயரால் பெயர் பதாகை திறக்கப்பட்டதுடன், யாழ். பாதுகாப்பு படைத் தளபதியால் சமாதான புறாக்கள் கூண்டுகளிலிருந்து திறந்து விடப்பட்டு அனைத்து இனங்களினதும் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினரால் மா,தோடை, ஆணைக்கொய்யா, மர, முந்திரிகை, மாதுளை உள்ளிட்ட 2000 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேராவின் உரையின் போது, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவான மர நடுகை திட்டத்துக்கு தன்னை அழைத்தமைக்காக யாழ்ப்பாண பேராயருக்கு நன்றி தெரிவித்தார்.
அதனையடுத்து யாழ்.சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் செயலாளர் நிதிலா மரியம்பிள்ளை அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்ட பின்னர் படையினரின் பங்களிப்புக்காகஅமைப்பின் நன்றியைத் தெரிவித்தமையும் குறிப்பிடப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் யாழ். பாதுகாப்பு படைத்தளபதி மற்றும் ஏனைய விருந்தினர்கள் யாழ்.சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் உதவியால் பயனடைந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரால் விற்பனை செய்ய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சில உற்பத்தி பொருட்களை பார்வையிட்டதுடன் அவர்களுடன் கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மத பிரமுகர்கள், படைப்பிரிவு தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள், யாழ்.சமூக பொருளாதார மேம்பாட்டு மையத்தின் உறுப்பனர்களும், படையினரும் கலந்துகொண்டனர். bridgemedia | Nike Running