09th March 2021 13:00:11 Hours
3 வது இலங்கை இராணுவ பேர்க்கருவி படையணியில் நடத்தப்பட்ட 'உள்ளூர் வெடிமருந்து மற்றும் தொழில்நுட்ப பாடநெறி எண் 09' பயிற்சிகளை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்ன சான்றிதழ்கள் மற்றும் சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2021 மார்ச் 6 ஆம் திகதி நடந்தது.
5 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.எஸ்.டி. பெர்னாண்டோவின்அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக மத்திய ஆயுத மற்றும் வெடிமருந்து களஞ்சியத்தின்தளபதி பிரிகேடியர் இந்திராஜித் விதானாச்சிமற்றும் போர்கருவி கல்லூரியின் தளபதி லெப்டினன் கேணல் ஜி.டி.எஸ் சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழா ஆரம்பிக்கும் முன்பாக பிரிகேடியர் இந்திராஜித் விதானாச்சி, லெப்டினன் கேணல் ஜீ.டி.எஸ் சில்வா நிகழ்வின் நினைவம்சமாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.
இந்த பாடநெறியின் பயிலுனர்கள் "பாவனைக்கு உதவாத வெடிமருந்துகளை அகற்றுதல்"தொடர்பாக விளக்கமளிக்கும் காணொலிகள் காண்பிக்கப்பட்டதுடன். மேற்படிச் செயற்பாடுகளுக்களுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினரால் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பாடநெறியை கற்ற 24 மாணவர்களில் வெடிமருந்து மற்றும் தொழில்நுட்ப பாடநெறி எண் 9 இன் சிறந்த மாணவராக லான்ஸ் கோப்ரல் புத்திகா விருது பெற்றார். Adidas footwear | Women's Sneakers