08th March 2021 16:05:24 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 143 பிரிகேட் 1 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் நிகவெரடிய பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை பழுதுபார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை (7) தன்னார்வ அடிப்படையில் உதவிகளை வழங்கப்பட்டது.
இப்பகுதியில் அதிக காற்று வீச்சு காரணமாக 17 வீடுகளுக்கு சேதமடைந்ததுடன் அப்பகுதி மக்கள் உதவியற்ற நிலையில் இருந்ததுடன் நிலைமை குறித்து அறிவுறுத்தலின் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியானகே அவர்களால் அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ மற்றும் 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா ஆகியோரினால் 14 படைப்பிரிவினரை அனுப்பி உதவிகளை வழங்குமான பணித்தனர்.
அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற படையினர் பழுது பார்ப்பு வேலைகள், விதிகளில் முறிந்து கிடந்த மரங்களையும் அகற்றினர்.
1 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி மேஜர் வி.குமாரசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Running Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth