Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2021 13:20:07 Hours

இராணுவ தலைமையகத்தில் சேவை வனிதையர் பிரிவின் மகளிர் தின நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்திற்கு சிறப்பு அங்கிகாரத்தை சேர்க்கும் வகையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு திங்கட்கிழமை (8) இராணுவ தலைமையக பல்நோக்கு மண்டபத்தில் தையல் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது. அத்துடன் ஒப்பனை அலங்கார தொகுதிகள், ஆசிரிய நியமனக் கடிதங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் கலந்து கொண்டதுடன் 50 பெண் அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரவாணை அற்ற பெண் அதிகாரிகள் உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி கலந்துக்கொண்டனர்.

11 கெமுனு ஹேவா படை, 8 வது கஜபா படை, 12 வது கஜபா படை, 24வது விஜயபாகு காலாட் படை மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியவற்றின் கோரிக்கைக்கு அமைவாக நன்கொடையளர்களின் அன்பளிப்பான ஐந்து ஜுக்கி தையல் இயந்திரங்கள் பரிசளிக்கப்பட்டன.

அதனையடுத்து இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிகப்படும் தியதலாவ, இபலோகம மற்றும் காலியில் ‘விரு கெகுலு’ முன்பள்ளிகளில் கற்பிப்பதற்காக மூன்று அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் அபேக்ஷா கருவுறுதல் மையத்தின் பணிப்பாளர் வைத்தியர் சம்பா நெல்சன், ஸமித் ஒகாபோ குளோபல் பெர்ப்யூமரீஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் ஆலோசகர் திரு கிரிஷ்ணா ஸ்மித், ரமணி பெனர்ன்டோ அழகு கலை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் நிறுவனத்தின் தில்ஹாரா மதுமாலி திருமதி ஷிம்லா ஹமீட் , ஆசிரி வைத்தியசாலை (பிரைவேட்) லிமிடெட்டின் உணவு பத்திய ஆலோசகர் செல்வி ஷகிலா கமகே மற்றும் அழகு ராணி (2005 திருமதி இலங்கை) திருமதி ரோசன் டயஸ் ஆகியோர் 'உற்பத்தித்திறன் குறித்த பெண்களின் ஆரோக்கியம்', 'வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதற்கான கலை', 'தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சீர்ப்படுத்தல்' மற்றும் 'அழகான தோலுக்கான உள் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் ' எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் முடிவில், இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவியினால் விரிவுரையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களுடன் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவில் கர்ணல் ஒருங்கிணைப்பு கர்ணல் சுமேத பாலசூரிய, கர்ணல் (நிர்வாகம்), கர்ணல் அருண விஜேகோன் மற்றும் பல இராணுவ சேவை வனிதையர் பிரிவு அதிகாரிகள் அன்றைய நுகழ்வின் ஏற்பாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர். Nike air jordan Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth