08th March 2021 17:02:53 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள படைவீரர்களுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பிரதிநிதிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறைபாடுகள்,தேவைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (7) வெலிகந்தவிலுள்ள கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் கேட்டறியப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மேற்படி நிகழ்வுக்கு தலமை தாங்கியிருந்துடன், ஓய்வுபெற்ற மற்றும் போரில் காயமடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் நீத்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனில் இராணுவம் மும்முரமாக அக்கரை கொண்டுள்ளதாகவும், அந்த வீரர்கள் தமக்கான புகழையும் அங்கிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும் எனவும், அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஊக்குவித்து தேசிய பொருளாதாரம் மற்றும் இராணுவத்துக்கான சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியால் 22, 23, 24 பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்களின் தளபதிகள் படைவீரர்களுக்கான நல்வாழ்வையும் அவர்களுக்கான அமைப்புகளின் முன்னேற்றத்தையும் மேற்பார்வை செய்தல் மற்றும் மேம்பாட்டிற்கான சாத்தியகூறுகளை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நியமித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மாவட்ட ரீதியான அமைப்பாளர்களை அழைத்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன், வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள படைப்பிரிவு தலைமையகங்களின் கீழ் உள்ளவர்களின் பிரச்சினைகளை கேட்டறியுமாறும் பணிப்புரை விடுத்தார். buy shoes | Zapatillas de running Nike - Mujer