07th March 2021 10:27:53 Hours
மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட வியாழக்கிழமை (4) புத்தல அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தின் புதிய தளபதியாக கடமைகளை வாழ்த்துக்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தளபதி உத்தியோகபூர்வமாக வளாகத்திற்கு வருகை தந்த போது இராணுவ முறைமைகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. மேலும் பிரதி தளபதி மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்றனர். சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான ஆவணத்தில் கைசாத்திட்டு அலுவலகத்தை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டிவைத்த அவர், பிரதான கேட்போர் கூடத்தில் உரையொன்றினை நிகழ்திய பின்னர், படையினர், அதிகாரிகளுடனான குழுப்படம் எடுக்கம் நிகழ்விலும் இணைந்துகொண்டார். அத்தோடு தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். buy footwear | adidas Yeezy Boost 350