05th March 2021 18:40:41 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ வியாழக்கிழமை (4) முல்லைத்தீவிலுள்ள 59 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், 59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சூரிய பண்டார அவர்களினால் புதிய தளபதி வரவேற்கப்பட்டார்.
பின்னர், மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, தலைமையக வளாகத்தில் ஒரு மா மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன் படையினருக்கான உரையென்றினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பல சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். Sports Shoes | Buy online Sneaker for Men