07th March 2021 07:00:53 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே மார்ச் 05 ஆம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, தளபதியை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன் அங்கு அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அத்தோடு போரினால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், ‘ஏ’ காவலர் அறை, பார்வையாளர்களின் வரவேற்பு மையம், வர்ண மண்டபம், நிறுவன அலுவலகங்கள், நவீன வகுப்பறை வளாகம், கணினி ஆய்வுக்கூடம், மொழி ஆய்வுக்கூடம், நூலகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து இலங்கை - சீன நட்புறவு கேட்போர்க்கூடத்தில் பயிலிளவல் அதிகாரிகள், அதிகாரவாணைப்பெறா படையினருக்கு உரை நிகழ்த்தியதுடன், இராணுவ கல்வியற் கல்லூரியின் சிறப்பான சேவையை பெரிதும் பாராட்டியதுடன் மனித வளங்கள், ஒழுக்கம், சுய ஒழுக்கம், முன்மாதிரியான நடத்தை, சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்பிலும் வலியுறுத்தினார். இதற்கிடையில் பிரிவு பொறுப்பதிகாரிகளினால் விளக்கம் வழங்கப்பட்டதிடன் கல்லூரி பற்றிய ஆவணப்படமும் ஔப்பரப்பப்பட்டது. மதியபோசணதுடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது. short url link | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf