08th March 2021 11:29:14 Hours
தலை மன்னார் உருமலை பகுதியிலுள்ள, ஏழைக் குடும்மொன்றிற்கு 11 வது இலங்கை பீரங்கி படைப்பிரிவினர் வைத்தியர் பாக்ய வீரரத்ன அவர்களின் நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட வீடு புதன்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஹேமந்த பண்டார மற்றும் 54 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ், தலைமன்னார் உருமலை திருமதி எஸ். வினிதா மற்றும் அவரது குழந்தைகளுக்காக கட்டப்பட்டப்பட்ட புதிய வீட்டிற்கு தலை மன்னார் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் பாக்ய வீரரத்ன நிதியுதவி அளித்திருந்தார்.
543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் இமால் அஸலராட்சி, மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். வினோதன் மற்றும் நன்கொடையாளர் வைத்தியர் பாக்ய வீரவர்தன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த சமூக நலத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டின் நிர்மாண பணிகள் 11 வது இலங்கை பீரங்கி படை கட்டளை அதிகாரி லெப்டிணட் கேணல் விராஜ் அபேசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆரம்ப விழாவில் 54 வது படைப்பிரிவு மற்றும் , 11 வது இலங்கை பீரங்கிப் படையின் அதிகாரிகள் படையினரும் கலந்துகொண்டனர். Best Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals