Header

Sri Lanka Army

Defender of the Nation

07th March 2021 16:27:53 Hours

காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சூழ 100 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

சர்வதேச இலவச பொது போக்குவரத்து தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் துறு மிதுறு – நவ ரடக் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மரக் கன்று நடுகை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (5) காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் 100 மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி 100 மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் திட்டத்தின் கீழ் இழுப்பை , மகிழம் , மகோகனி, மருதை மற்றும் பலா வகைகளை சேர்ந்த 100 மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் திட்டம் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் ஆசிர்வாதத்துடன் காங்கேசன்துறை ரயில் நிலைய அதிபர் திரு. நிஷாந்த பீரிஸ் மற்றும் ரயில் நிலையத்தின் பணியாளர்களின் ஒத்துழைப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு முன்ரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் வண்டித மஹின்கந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு காங்கேசன்துறை ரயில் நிலைய அதிபரின் அழைப்பிற்கு அமைவாக பிரதம அதிதியாக வடக்கு முன்ரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி கலந்துக்கொண்டார். தல்செவன இராணுவ விடுமுறை விடுதியின் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் 100 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

இதன்போது முப்படையினர் ,பொலிஸார், யாழ். வனவள பாதுகாவலர் திரு வி.பி.என் வீரகோன், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கே.ஏ.எஸ்.ஏ.நாணயக்கார , மாவட்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி காங்கேசன்துறை ரயில் நிலைய ஊழியர்கள், யாழ் படையினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். Sports brands | Men’s shoes