06th March 2021 15:45:58 Hours
விஜயபாகு காலாட் படை தலைமையகம் மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தடகள போட்டிகள் – 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விஜயபா காலாட் படை தலைமையகத்தில் நடைபெற்றது.
55 வது படைப்பிரிவின் தளபதியும் விஜயபாகு காலாட் படையின் படைத் தளபதியிமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். விஜயபாகு காலாட் படையின் நிலையத் தளபதி. பிரிகேடியர் நலீன் பண்டாரநாயக்க, அவர்களுக்கு 22 வது விஜயபாகு காலாட் படை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.ராமநாயக்க ஆகியோரால் அன்றைய பிரதம அதிதி வரவேற்கப்பட்டார்.
எதிர்காலத்தில் விஜயபா காலாட்படை படை தடகளத் துறையில் ஒளிவீசும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கும் விதமாக சுமார் 450 இளம் மற்றும் ஆற்றல்மிக்க விஜயபாகு காலாட் படையின் விளையாட்டு வீரர்கள் 19 படை அலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த வருட நிகழ்வில் தங்களது தடகள திறன்களை வெளிப்படுத்தினர். இந்த 3 நாள் தடகள சாம்பியன்ஷிப்பின் போட்டிகள் திங்கள் (22) அன்று நடைபெற்ற 1500 மீ, 100 மீ மற்றும் 400 மீ மற்றும் 4×400 மீ அஞ்சல் ஓட்டம் ஆகியவற்றுடன் நிறைவு பெற்றது.
இந்த விளையாட்டு போட்டிகளில் 22 வது விஜயபாகு காலாட் படையினர் 134 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தனர். 4 வது விஜயபாகு காலாட் படை 102 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் 8 வது விஜயபாகு காலாட் படை 81 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
அதனையடுத்து வி.ஐ.ஆர் தடகள சாதனைகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அன்றைய தலைமை விருந்தினர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, வெற்றியாளர்களுக்கு கேடயங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
நிகழ்வின் நிறைவில் பிரதம விருந்தினரால் விஜயபாகு காலாட் படையினரின் திறமைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் உபுல் வீரகோன், 581 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமல் ஹேமரத்ன, மிஹிந்து செத் மெதுராவின் தளபதி கேணல் ஜீவன் குணதிலக, எயார் மொபைல் பிரிகேட் தளபதி கேணல் சுபத் சஞ்சீவ உள்ளிட்ட பல சிரேஸ்ட் அதிகாரிகளும் புதன்கிழமை (24) நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். Running sports | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092