06th March 2021 16:00:58 Hours
தேசத்தின் பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் லியோ கழகம் பாதுகாப்பு துறையினர் பயன்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் இலங்கை இராணுவ தொண்டர் படை (SLAVF) தலைமையகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படைப்பிரிவில் வெள்ளிக்கிழமை (05) தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களுடனான சந்திப்பின் போது லியோ கழக பிரதிநிதியான சந்தருவான் அவர்களால் சக்கர நாற்காலிகள், கணினி, நீர் சுத்திகரிப்பு கருவி, அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் சுத்திகரிப்பு திரவியங்கள் என்பன நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட கொழும்பு பல்கலைக்கழகத்தின் லியோ கழகத்தின் உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, தேசிய கடமைகளுக்கு உறுதியளித்த படையினரை ஊக்குவிக்கும் அவர்களின் முயற்சியைபயும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதி தளபதி, முதன்மை நிலை அதிகாரிகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட பல்கலைக்கழக லியோ கழகத்தின் 306 சி 1 பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தில் கேணல் நலிந்திர மஹாவித்தான அவர்களால் நன்கொடை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. Running Sneakers Store | Sneaker & Lifestyle News