05th March 2021 20:00:46 Hours
இன்று (07) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 376 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 360 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 83 பேர் கம்பஹா மாவட்டத்திலும் , 55 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் , 49 பேர் கொழும்பு மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 173 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (07) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 85,335 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 81,598 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 81,768 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 3,070 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 497 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றினால் 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணித்தவர்கள் தொடங்கொட, கொழும்பு 09, பத்தரமுல்லை, மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (07) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 497 ஆகும்.
மேலும், (07) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 102 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,148 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (06) 8,343 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. bridgemedia | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ