Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 15:20:05 Hours

வழங்கல் தொடர்பாக பயிற்சி பெறும் கனிஷ்ட அதிகாரிகளுக்கு பெற்றோலியம் உற்பத்திகள் பற்றிய விளக்கம்

இராணுவ வழங்கல் பயிற்சி பாடசாலையின் இராணுவ வழங்கல் தொடர்பாக பயிற்சிபெறும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான 17 வது பாடநெறியின் ஒரு பகுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைமையகத்திற்கான விஜயம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஐ.ஓ.சி நிறுவனத்தின் இயக்க உதவி முகாமையாளர் திரு சுதர்ஷன, பெறுகை நடைமுறைகள், சேமிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விநியோகச் செயற்பாடுகளை உள்ளடக்கிய விநியோக முகாமைத்துவ வலையமைப்பு எனும் தலைப்பில் விரிவுரைவொன்றை நிகழ்த்தினார். மேலும் ஐ.ஓ.சி தயாரிப்புகளின் வாகன எரிபொருள், மசகு எண்ணெய்கள், கனிய எண்ணெய்கள் பெட்ரோலிய இரசாயனங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு களப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் உதவி முகமையாளர், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முகாமையாளர் திரு அகிலன் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் பியிலுனர் அதிகாரிகள் கள பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த கள பயணத்தின் போது கப்பல்களில் இருந்து நிலத்திற்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கான நடைமுறை மற்றும் தீயணைப்பு செயற்பாடுகள் தொடர்பிலான களப் பயிற்சி வழங்கப்பட்டதுடன். பயிலுனர் அதிகாரிகளுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.

இறுதியாக பயிற்சி கல்லூரியின் 17 வது பாடநெறி பயிற்சி அதிகாரிகளினால் லங்கா ஐ.ஓ.சி.யின் சிரேஸ்ட் உப தலைவர் திரு. பினோஜ் பால் அவர்களை பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பயிற்சி கல்லூரியின் 17 வது பாடநெறியின் பயிலுனர் அதிகாரிகள் உள்ளிட்ட சகலருக்கும் பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. url clone | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival