08th March 2021 14:46:01 Hours
இலங்கையில் கொவிட் - 19 நோய்க் கட்டுப்பாடிற்காக முன்நின்று அயராது உழைக்கும் 63,000 ஊழியர்கள் மற்றும் முப்படையினருக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான அவசியம் குறித்த உண்மையான தலைமைப் பண்புகளை நிறூபிக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று காலை 6 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
தொற்றுநோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் 62,000 இற்கும் மேற்பட்ட முப்படையினர் நாடு முழுவதிலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னரே இவர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டது சிறப்பம்சமாகும்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் முன்னுரிமையின் அடிப்படையில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த திட்டத்திற்கான இராணுவத்தின் அர்ப்பணிப்புக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைச் சேர்த்தார். ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தபோது, அவருடன் இந்திய உயர் ஸ்தானிகரும் வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
தடுப்பூசிகளை ஏற்படுவதில் அவதானமான நிலைமை இருந்தபேதிலும் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கொவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படையின் முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டி ஒரு முன்மாதிரியான தலைவராக திகழ்ந்து அதனால் சுமார் 63,000 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இருப்பினும் அவர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை மறுத்திருந்ததுடன், முன்னணி இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட பின்பே தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்வேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கொவிட் - 19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்திடம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதத்தில் வருகைத் தந்த இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன், அவருடைய கனிவான நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்திற்கான அவருடை ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கொவிட் - 19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் முப்படை பணியாளர்களுக்கு ஏற்றுவதற்காக பிரத்தியேகமாக மற்றுமொரு தொகை தடுப்பூசி தொகையை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துடன், இந்த விவகாரத்தில் அவர் அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புளைகளுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்திய அரசு பரிசளித்த அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தொகுதி 2021 ஆம் அண்டு ஜனவரி 28 அன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ மருத்துவப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் சிலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
ஆயிரக்கணக்கான முப்படை உறுப்பினர்கள் தற்போது நாட்டிற்குள் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தனிமைப்படுத்துதல், பாராமரிப்பு மையங்களை நடத்துதல், அவர்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான தங்குமிட வசதிகளை வழங்கள், பொதுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், விமான நிலைய பாதுகாப்பு, தடுப்பூசி ஏற்றல் உள்ளிட்ட பன்முகச் சேவைகளில் ஈடுட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்றங்களின் பணியாளர்கள், மேற்கு மாகாணத்தில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் பலர் இந்த தடுப்பூசிகளை வழங்க கொழும்பு இராணுவ வைத்தியசாலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் போது இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். best Running shoes | GOLF NIKE SHOES