05th March 2021 13:20:05 Hours
திருகோணமலையிலுள்ள இராணுவ வினியோக கல்லூரியின் வெளிநாட்டு பயிலுனர் அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெப்ரவரி 21 - 25 திகதிகளில் நாட்டின் தெற்குப் பகுதிக்கு ஒரு சுற்றுப்பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இராணுவ விணியோக கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர அவர்களினால் பங்களாதேஷ் மற்றும் நேபாலம் மாணவர்களுக்காக இந்த சுற்றுலா ஏற்பாடுசெய்யப்பட்டது.
சுற்றுப்பயணத்தின் போது, மாணவர் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலாச்சார, மத மற்றும் இயற்கை இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். மடு ஆற்றில் படகு பயணம், மற்றும் காலி கோட்டை, காலி தேசிய அருங்காட்சியகம் மற்றும் கடல் அருங்காட்சியகம், ரிடியாகம சவாரி பூங்கா, பறவைகள் ஆராய்ச்சி மையம், மடுநாகல சுடுதன்னி கிணறு மற்றும் சூரிய சக்தி உற்பத்தி திட்டம் என்பவனவற்கை உள்ளடக்கியதாக சுற்றுப்பயணம் அமைந்திருந்தது.
அத்தோடு இலங்கை உணவு வகைகளை மற்றும் இனிப்பு பண்டங்களை சுவைப்பதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்த்து.
பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. Sport media | jordan Release Dates