05th March 2021 18:20:05 Hours
கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் திலங்க ஹங்கிலிபொல அவர்கள், இராணுவ தலைமையகத்திலுள்ள காலாட் படைப்பிரிவு பணிப்பகத்தின் 18 வது பணிப்பாளராக தனது அலுவலக கடமைகளை வியாழக்கிழமை (04) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மத அனுட்டானங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் திலங்க ஹங்கிலிபொல பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு அலுவலகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகளும், ஏனைய இராணுவச் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர் ஏற்கனவே இப்பதவியினை வகித்த பிரிகேடியர் சிறிநாத் ஆரியசிங்க அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். Sport media | Nike for Men