Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 18:57:46 Hours

பாதுகாப்பு படையினரால் சட்டவிரோதமான மணல் அகழ்வு உகரணங்கள் பறிமுதல்

23 வது படைப்பிரிவுத் தலைமையகத்தின் 233 வது பிரிகேடின் 6 வது கஜபா படையணியின் படையினர் பொலிஸாருடன் இணைந்து வியாழக்கிழமை மாலை (4) சட்டவிரோதமா மணல் அகழும் உபகரணங்களை ஜயந்திபுரவில் மீட்டுள்ளனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய அமைவாக படையினர் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன், சமூக விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் வியாபாரம், கடத்தல்காரர்கள, சட்ட விதோமதாக மரம் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

ஜயந்திபுரவில் இரண்டு டெக்டர் இயந்திரங்களும் சில மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் வலுவான இயந்திரங்கள் சிலவும் கைபற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் 663 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 11 கஜபா படையணியின் படையினர் சட்டவிரோத மணல் அகழும் உபகரணங்களை கடந்த 4 ஆம் திகதி அம்பலபெருமால்குலம் பகுதியில் இருந்து மீட்டனர்.

2 டெக்டர் இயந்திரங்களும் சில மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் வலுவான இயந்திரங்கள் சிலவும் இப்பகுதியிலிருந்தும் படையினரால் மீட்கப்பட்டன. அதனையடுத்து முல்லைத்தீவு வசந்திபுரம் பகுதியிலிருந்தும் (04) மாலை சட்டவிரோத மண் அகழ்விற்காக பயண்படுத்தப்பட்ட. உபகரணங்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட்டின் கீழ் இயங்கும் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறு கைபற்றப்பட்ட சகல உபகரணங்களும் பாதுகாப்பு படையினரால் உரிய பகுதிகளின் பொலிஸ் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டது. Running sports | THE SNEAKER BULLETIN