Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 07:58:51 Hours

கம்பாஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ கற்கை நிலையம் பல்கலைக்கழகமாக தரமுயர்வு

யக்கல கம்பஹா விக்கிரமராச்சி சுதேஷ மருத்துவ பல்கலைக்கழகமாக பணி ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை (04) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டன.

கம்பாஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஜனிதா ஏ லியானக அவர்கள் சம்பிரதாய பூர்வமாக பிரதம விருந்தினரை அன்போடு வரவேற்றார். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோருடன் சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாரம்பரிய கண்டிய நடனக் குழு கலைஞர்களின் நடன நிகழ்வுகளுடன் வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் மங்கள விளக்கு ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பேராசிரியர் ஜனிதா ஏ. லியானகே வரவேற்புரை நிகழ்த்தினார். அதனையடுத்து பல்கலைக்கழகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்,பல்கலைக்கழக கீதம் மற்றும் புதிய பல்கலைக்கழகத்தின் வலைத்தள அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன், கம்பாஹா விக்ரமராச்சி ஆயுர்வேத நிறுவனம் முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதன் நினைவு சிறப்புக் குறிப்பு புத்தகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால் பதிவிடப்பட்டது.

அதனையடுத்து கம்பஹா விக்கிரமராச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தரான இலக்கிய சக்ரவர்த்தி, மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கலாநிதி. நியங்கொட தர்மகீர்த்தி தேரர் அறிமுகம் செய்யப்பட்டார் இதன்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வேந்தர் அவர்களுக்கு சாமரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக்கதின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலான காணொலி ஒன்றும் ஒளிபரப்பட்டது.

பின்னர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சி.கே. கே.கபில பெரேரா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர். Sport media | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD