Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 11:04:37 Hours

மினுஸ்மா படைத் தளபதி இலங்கை அமைதிகாக்கும் படையினரை பாராட்டினார்

மினுஸ்மா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் டெனிஸ் கயிலன்ஸ்பொரே அவர்கள், கிழக்கு பிரிவுத் தலைமையகத்திற்கான தனது அண்மைய விஜயத்தின் போது இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படைக் குழுவின் தளபதி லெப்டினன் கேணல் சிறிநாத் காலகே அவர்களை சந்தித்து இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படைக் குழுவின் பணிகளை பாராட்டினார்.

மோசமான பாதுகாப்பு நிலைமை மற்றும் மினுஸ்மா அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் நோக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய எதிரியின் முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தும் பகுதிகளுனூடாக நகர்ந்து சென்று இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படைக் குழுவினர் தனது ஒதுக்கப்பட்ட பணியை எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதைக் கண்டு தான் வியப்படைவதாக கலந்துரையாடலின் போது மினுஸ்மா அமைதிகாக்கும் படைத் தளபதி தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. சரக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாத்து எந்த விதத்திலும் அவைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் அதன் நடவடிக்கைகளை நிறைவேற்றியது குறித்து தான் ஆச்சரியப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

மினுஸ்மா அமைதிகாக்கும் நடவடிக்கையின்போது இலங்கை இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் அனைத்து அம்சங்களிலும் தொழில்முறை மற்றும் ஒழுக்கங்கள் செயல்திறன் ஆகியவற்றால் ஒரு படைத் தளபதியாக மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த குறித்த கலந்துரையாடலின் இறுதியியில் படைத் தளபதிக்கு ஒரு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. Nike air jordan Sneakers | Nike - Shoes & Sportswear Clothing