Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2021 16:10:58 Hours

புதிய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தனது கட்டளை அலகுகளுக்கு விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 571 வது பிரிகேட் மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கு புதன்கிழமை (03) விஜயம் செய்தார்.

அதன் போது 571 வது பிரிகேட் தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக வெலகெதரவால் பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நடுவதற்காக அழைக்கப்பட்டார்.

பின்னர் பிரிகேட் மற்றும் படை அலகுகளின் பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கங்களை பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகளினால் நடத்தப்பட்டது.

அதன்பிறகு, அவர் 9 இலங்கை சிங்கப் படைக்கும் 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படைக்கும் விஜயம செய்தார். அதன்போது தளபதிக்கு அவர்களின் பொறுப்புகள் , உளவுத்துறை திறன்கள் மற்றும் உச்ச திறன்கள் தொடர்பாக அந்தந்த அவகுகளின் புலனாய்வு அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த முகாம்களிலும் தனது விஜயத்தின் அடையாளமாக மரக்கன்றுகளை நாட்டினார்.

தளபதியின் விஜயத்தின் போது 57 வது படைப்பிரிவின் தளபதி , கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், 57 வது படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர். jordan Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp