02nd March 2021 16:00:58 Hours
இலங்கை சிங்கள உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற கல்கிஸ்ஸ ஹோட்டலின் சமையல் ஆலோசகரும் தலைமை சமயற்கலை நிபுணருமான தேசபந்து கலாநிதி டி பப்லிஸ் சில்வா அவர்களால் மார்ச் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள அனைத்து அமைப்புக்களின் சகல சமையல் பணியாளர்களினது திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.
முதல் அமர்வில் இலங்கை உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமுடைய மசாலாப் பொருட்கள் பற்றியதாக அமைந்திருந்ததுடன் சமையல்காரர்கள், பயிலிளவல் அதிகாரிகள், மற்றும் அதிகாரிகளுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், பாரம்பரிய உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி, சத்து நிலை போன்றவை தொடர்பான சந்தேகங்களையும் விரவுரையாளர் தெளிவுபடுத்தினர், அத்துடன் இந்த அமர்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கு சமயற் கலை பற்றிய புதிய அனுபவங்களை வழங்கும் வகையில் பல உணவு தயாரிப்பு முறைகளின் செயன்முறைகள் செய்துக்காட்டப்பட்டன.
இரண்டாவது நாளில், பங்கேற்பாளர்களுக்கு சிக்கன் தாது, மரக்கறி பக்கோடா, சிலி பேஸ்ட், மரக்கறி சாலட், மாம்பழ டிரஸ்ஸிங் மற்றும் உள்ளூர் மசாலாப் பொருட்களுடன் புடிங் போன்ற பல்வேறு உணவு வகைகளை தயாரிப்பது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் செயன்முறை ரீதியாக வழங்கப்பட்டதுடன். சமயல் கலை அம்சங்களின் சுவார்ஸ்யத்தை நேசித்து ஆரோக்கியம் மற்றும் தரத்திற்கான மூல பொருட்கள் பற்றிய விடயங்களும் அறிவுறுத்தப்பட்டன.
நிகழ்வின் நிறைவில், பங்கேற்ற சகலருக்கும் சான்றிதழ்களை கல்வியற் கல்லூரியின் தளபதி மற்றும் தேசபந்து கலாநிதி. பப்லிஸ் சில்வா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இறுதியாக சமையல் கலை நிபுணருக்கு பணியாளர்களினால் நன்றி பாராட்டப்பட்து. Sports brands | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat