06th March 2021 14:42:40 Hours
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்திய விமானப் படைத் தளபதி பிரதம ஏயார் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதூரியா நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். அவர் இன்று (04) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அவருக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செய்யப்பட்டதுடன், இந்திய விமானப்படைத் தளபதியை இராணுவத் தலைமையகத்திற்கு இராணுவ தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேணல் இந்திக பெரேரா வரவேற்றார்.
அதனையடுத்து நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களால் இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பு அழைத்துச்செல்வப்பட்டார்.
பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்திய விமானப்படைத் தளபதியை வரவேற்று இராணுவ தலைமையகத்தில் அவரை சந்தித்ததுடன் இலங்கை இராணுவத்தின் முதன்மை அதிகாரிகளை இந்திய விமானப் படையின் தளபதிக்கு அறிமுகப்படுத்திய பின்னர், குழு படம் எடுக்கம் நிகழ்வில் அவர் இணைந்துக்கொண்டதுடன். தனது வருகையின் நினைவுகளையும் பதிவிட்டார்.
பிரதம ஏயார் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதூரியா உடனான இராணுவ தளபதியின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பாடல் உறவுகளை மேம்படுத்தல், அதற்கான சாத்தியக்கூறுகள், இரு நாடுகளுக்கும் இடையில் வான் பரப்புச் செயற்பாடுகளின் போதான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் மற்றும் தொடர்ந்தும் இருதரப்பு பணி உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய எண்ணங்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.
நல்லுறவு சந்திப்பின் நிறைவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்திய விமானப்படை தளபதிக்கு நினைவு பரிசை ஒன்றை வழங்கிவைத்ததுடன், இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி புறப்படுவதற்கு முன்பாக தளபதி அலுவலகத்திலுள்ள நினைவு பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
இந்திய விமானப்படைத் தளபதி பற்றிய விவரம் கீழ்வருமாறு
இந்திய விமானப் படைத் தளபதி பிரதம ஏயார் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதூரியா பி.வி.எஸ்.எம் ஏ.வி.எஸ்.எம் வி.எம் ஏ.டி.சி 2019 செப்டம்பர் 30 ஆம் திகதியன்று இந்திய விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றார். மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பழைய மாணவரான இவர் விமானப்படை கல்லூரியின் சிறந்த மாணவருக்கான பட்டத்தையும் ‘Sword of Honour’ கௌரவ விருதையும் பெற்றுக்கொண்டவர் என்பதும் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15, அன்று இந்திய போர் விமான பிரிவின் அதிகாரிகளில் ஒருவராக அதிகாரவாணையினை பெற்றவர்.
அத்தோடு அவர் , 27 வகையான யுத்த விமானங்களில் 4270 மணி நேர பயண அனுபவத்தை கொண்டவர் என்பதுடன், விமானி Cat 'A' தர அதிகாரி என்ற அந்தஸ்த்தையும் பெற்றுள்ளதுடன், பங்காளாஷ் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது நான்கு தசாப்த கால சேவையில் இலங்கை விமானப் படைக்கு தனது தலைசிறந்த சேவையை வழங்கியிருப்பதுடன், ஜகுவார் படைப்பிரிவின் கட்டளை தளபதியாகவும், தென்மேற்கு படைப்பிரிவுகளின் தலைமை கட்டளை தளபதியாகவும், விமானங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கட்டமைப்புக்களை தரப்படுத்தல் பிரிவின் கட்டளை மற்றும் பிரதான வழிநடத்தல் அதிகாரியாகவும், ‘தேஜாஸ்’ சிறிய ரக போர் விமான செயற்றிட்டம் மற்றும் பறக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான குழுவின் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளதுடன் விமானங்கள் பறத்தல் மற்றம் பறப்பதற்கான அடிப்படை தயார்படுத்தல் செயன்முறைகளை சோதனை நடவடிக்கைகளில் அதிக தடவைகள் பங்கேற்றுள்ள ஒருவராகவும் விளங்குகிறார். அத்தோடு அவர் விமானப் படைத் தலைமையகத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாகவும், செயற்றிட்ட பதில் பணிப்பாளராகவும், மத்திய விமானப்டையின் சிரேஷ்ட விமானப்படை பிரதானி, இராணுவ தலைமையகத்தின் பதில் பதவி நிலை பிரதானி,தெற்கு விமானப் படைகளின் கட்டளைத் தளபதி , விமானப் படை பயிற்சிக் கட்டளையின் தளபதி உள்ளிட்ட பதவிகளை அவர் விமானப் படை பிரதானியாக பொறுப்பேற்பதற்கு முன்னர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக 2002 ஆம் ஆண்டில் வாயு சேனா பதக்கம், 2013 இல் அதி விஷிஸ்ட் சேவை பதக்கம் மற்றும் 2018 இல் பரம விஷிஸ்ட சேவை பதக்கம் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், 2019 ஜனவரி 01 அன்று மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அவர்களால் இந்திய விமானப் படையின் சிறப்பு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் திருமதி ஆஷா பதூரியாவை திருமணம் செய்து கொண்டதுடன் அவர்களுக்கு, சோனாலி என்ற மகளும் சௌரவ் என்ற மகனும் உள்ளனர். Sports News | Nike Shoes, Sneakers & Accessories